Kovilpatti KNR Kadalaimittai

கோவில்பட்டி 
கே.என்.ஆர் கடலை மிட்டாய் இப்போது ஆன்லைனில்!!

அன்றிலிருந்து இன்று வரை எந்த பெட்டி கடைக்கு சென்றாலும், நம் மனம் அங்கே கண்ணாடி பேழையில் அடைத்து விற்கப்படும் கடலை மிட்டாயை சுவைக்க நம்மை தூண்டும். கடலை மிட்டாய் உண்பது வெறும் சுவைக்காக மட்டும் அல்ல, அதனை உண்டால் நம் உடலுக்கு பலம், ஆரோக்யம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கும். இந்த உலகத்தில் பல வகையான கடலை மிட்டாய்களை நீங்கள் சுவைத்திருக்கலாம், ஆனால் உன்னதமான தரமும், சுவையும் இருப்பது  கோவில்பட்டி கடலை மிட்டாயில் மட்டும் தான்
.
அப்படி என்ன தான் இருக்கு இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் ! :

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரிசல்மண்ணில்
விளையும் நிலக்கடலைக்கு இயற்கையாவே இனிப்பு தன்மை இருக்கும்
 தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள். இத்தகைய  கோவில்பட்டி கடலை மிட்டாயை அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டு வருவதோடு அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயார் செய்யும் நிறுவனங்களை அதிக அளவில் காணலாம்.அதில் குறிப்பாக KNR என்கிற கடையில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாயில் தான் சுவை மிக அதிகமாக இருக்கும். இதன் சுவையின் ரகசியம் இந்த கோவில்பட்டி ஊரு மண் வாசனையும், கோவில்பட்டியில் பல வருட அனுபவத்துடன் கடலைமிட்டாய் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் கை பக்குவம் தான் கடலை மிட்டாயின் அதிக சுவைக்கு காரணம்.




 கடலை மிட்டாய் செய்யும் முறை:
சுத்தமான முறையில் வாணலியில் கடலைகளை வறுத்து , பின்பு சூடு ஆறியபின் தொளிகளை நீக்கி பருப்பை தயார் செய்கின்றார்கள்.அதன் பின் நாட்டுமண்டவெல்லத்தில் பாகு காய்ச்சி இரண்டுக்கு ஒன்று (2:1) என்ற விகிதத்தில் கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள். பின்னர், கற்கண்டு மற்றும் ஏலக்காய் ஆகியவை தூளாக்கப்பட்டு, வெட்டப்பட்ட கடலைமிட்டாய் மீது தூவப்படுகிறது. இவ்வாறாக தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய் கால் கிலோ, அரைகிலோ, ஒரு கிலோ என எடையிடப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. மேலும், உதிரி கடலைமிட்டாய் எனவும் பல்வேறு வடிவங்களிலும் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  இப்போது இருக்கும் இந்த அவசர காலகட்டத்தில், நாம் ஒரு ஒரு கடைக்கும் ஏறி இறங்கி நாம் அதை சரிபார்த்து வாங்க முடியாது. இதை கவனத்தில் கொண்ட நம்ம கே.என்.ஆர் நிறுவனம் ஒவ்வொரு ஊருக்கும் ஆன்லைன் மூலம் உங்கள் வீடு தேடி  இந்த சுவையான இனிப்பு பண்டத்தை டெலிவரி செய்கிறது. .

CONTACT NO : 98426-88039

Comments